பொருள் – கேள்வி | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
பொருள் – கேள்வி | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்
கவிதை குழல் மூலமாக “கேள்வி” என்ற தலைப்பில் கேள்வியின் முக்கியத்துவத்தையும், கேள்வியின் இன்றியமையாத தன்மையையும் பற்றி இப்பதிவில் காணலாம்.
முதலில் கேள்வி என்பதைப் பற்றிய அறிவைப் பெறலாம்.
கேள்வி என்பது தமக்கு எதன் மீதாவது சந்தேகம் ஏற்படும்போது, அதனை தீர்த்துக் கொள்வதற்காக எழுப்பப்படுவது ஆகும்.
ஒருவன் கேள்வி கேட்காவிடில், அவன் எப்பயனையும் அடைய மாட்டான்.
எவனொருவன் கேள்வி கேட்கின்றனோ, அவனே தினந்தோறும் கற்றுக் கொண்டிருக்கிறான். கேள்வி கேட்பதால் மட்டும்தான் அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும்.
கேள்வியால் மட்டும் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.
கேள்வி கேட்பது எப்படி இருக்க வேண்டுமென்றால், ஆழ்ந்த சிந்தனை உள்ளதாகவும், இன்னல்களைப் போக்குவதாகவும் இருத்தல் வேண்டும்.
கேள்வியானது ஒருவருடைய வாழ்வில் உலக அறிவை புரிந்து கொள்ள உதவி புரிகின்றது.
கேள்வியின் மூலம் அடையும் பயனை ஒரு கதையின் வாயிலாக இன்னும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அது ஒரு அழகிய கிராமம் ஆகும். அந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடமானது இருக்கின்றது.
கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் கல்வி கற்கச் சென்ற னர். ஒருவர் கூட பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறவில்லை.
இதனால் அப்பள்ளி மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்கினர்.
சரி. அந்த பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் எவ்வாறு அறிவில் சிறந்து விளங்குகின்றார்கள்? என்ற கேள்வியானது நம்மில் எழும் அல்லவா.
இதற்கு பதில் என்னவென்றால், அப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் முறையே ஆகும்.
பள்ளிகளில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்களுக்கு ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் கற்பிக்கின்றார்கள்.
மாணவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான நேரமும் அங்கு அதிகமாக உருவாக்கப்படுகின்றது
எப்போது ஒருவன் கேள்வி கேட்பதை தொடங்குகின்றானோ, அப்போதே அறிவில் சிறந்தவனாக மாற ஆரம்பிக்கிறான்.
ஆசிரியர்கள் பாடம் நடத்திய பின், மாணவர்களை கேள்வி கேட்க சொல்லி நேரத்தை ஒதுக்குகின்றார்கள்.
மாணவர்களும் எவ்வித தயக்கமும் இன்றி கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலையும் அறிந்து கொள்கிறார்கள்.
கற்றலின் போது ஆசிரியரும், மாணவரும் ஒன்றிணைந்தால் மட்டும்தான் கற்றலின் பயனை மாணவனால் அடைய முடியும்.
இவ்வாறு இருவரையும் ஒன்று இணைப்பதற்கு கேள்வி கேட்கப்படும் முறையானது துணையாக உள்ளது.
பள்ளியில், ஒரு மாணவன் கேள்வி எழுப்பும் வேளையில், ஆசிரியர் பதில் கூறும்பொழுது இருவரிடத்திலும் நெருக்கமானது மேலோங்கி, பதிலானது அனைத்து மாணவர்களையும் சென்றடைகின்றது. இதனால் ஒருவன் கேள்வி கேட்பதன் மூலமாக அனைவரும் பயனை அடைகிறார்கள்.
இதிலிருந்து ஒருவன் கேள்வி கேட்பதின் மகத்துவத்தையும் மற்றும் அதன் நோக்கத்தையும் புரிந்திருப்பீர்கள்.
எவன் ஒருவன் தொடர்ந்து கேள்வி கேட்கின்றனோ அவனை வித்தியாசமாக பார்க்காமல், அவன் தன் அறிவைப் பெருக்கி கொள்ளவே கேள்வியைக் கேட்கிறான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உலகில் விலை மதிப்பற்றது என்னவென்றால் ஒருவனது அறிவே ஆகும். அறிவைப் பெருக்க வேண்டும் எனில் கேள்வி கேட்க வேண்டியது இன்றியமையாததாகும்.
கேள்வி கேட்பவன் மட்டுமே பல புதிய சிந்தனைகளை தன்னுள்ளே உருவாக்க முடியும்.
சிந்தனையானது மனதில் உருவெடுத்தால், அது செயலாக மாறி தனக்கும் சமுதாயத்திற்கும் நற்செயலாக மாறும்.
கேள்வியை கல்வியில் மட்டும் கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக கேட்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வியை கேட்க தயங்காமல், அறிவை பெருக்கிக் கொள்ள வழி இதுவே என கருதி கேள்வியை கேளுங்கள்.
நன்றி
-கவிதை குழல்.