பொருள் – சுற்றம் சூழ வாழ்! | Kavithai Kuzhal
பொருள் – சுற்றம் சூழ வாழ்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
சுற்றம் சூழ வாழ் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் ஆனது ஒரு மனிதனானவன் சுற்றத்தோடு இணைந்து வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
சுற்றம் என்ற சொல்லானது உறவினரை குறிக்கும்.
உறவினர்களுடன் இணைந்து வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியை தரும்.
உறவினர்களுடன் மனம் கலந்து, தன் நிறை குறைகளை கூறி, கூடி வாழ்வதே மகிழ்வைத் தரும்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி நமக்கு முன் வந்து நிற்பார்கள் உறவினர்கள் தான்.
பெரும்பாலும் உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?, என்ன படிக்கிறாய்?, என்ன வேலைக்கு போகப் போகிறாய்? என்று கேட்டால் உடனே கோபமானது நமக்கு தலைக்கு ஏறி முகத்தில் வெளிப்படும்.
இச்சூழ்நிலையில் கோபப்படுவது சரியல்ல. அவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழியே ஆகும்.
பேச்சுக்கள் கடினமாக இருந்தாலும் சுற்றத்தார் தீய எண்ணம் கொண்டவர்கள் அல்ல.
இது போன்ற உன்னத அன்பை காட்டும் நபர்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது சரிதானா?.
வாழும் வாழ்க்கையே அனைவரிடமும் சேர்ந்து வாழத்தான். இதில் தமக்குத் தெரிந்த, தன் சிறுவயதில் இருந்து கண்ட உறவினர்களை வாழ்விலிருந்து விலக்குவது எவ்வாறு சரியாகும் என்ற கேள்வியை நீங்கள் உங்கள் மனதில் கேட்டுக் கொள்ளுங்கள்.
அன்பை வெளிப்படுத்துவது முரட்டுத்தனமாக இருக்கின்றதே என்று கூட எண்ணி இருப்போம்.
உறவினர்கள் உங்களிடம் பேசுகின்ற பேச்சுக்கும், பழகும் விதத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்.இது அனைவரிடமும் இருப்பது தானே.
ஒருவர் தம் நலனைக் கருதி நல்லது கூறினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீயவற்றை கூறினால் அவற்றை தம் வாழ்வில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.
இதனை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு அறிவு ஆனது துணைபுரியும்.
எத்தனை வருடங்கள் வாழ்வோம் என்று எவரும் அறிய மாட்டோம்.
வாழும் வாழ்க்கையே அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்காகவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உறவினர்களுடன் மனம் கலந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து வாழ்வதே இல்வாழ்க்கைக்கு மகிழ்வைத் தரும்.
கவிதை குழல் கவிதைகளின் வாயிலாக சுற்றத்தாரின் பண்பு, ஒருவன் ஏன் சுற்றத்தாரை பெருக்கிக்கொள்ள வேண்டும்?, சுற்றத்தார் எப்போது இணைந்து இருப்பார்கள்?, சுற்றத்தாருடன் மனம் கலந்து ஏன் பழக வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு ”சுற்றம் சூழ வாழ்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளின் வாயிலாக விடையை அறியலாம்.
1. பழகும் முறை
வறுமை காலத்திலும், வளமை காலத்திலும்
சுற்றத்தாரிடம் பழகும் முறை
ஒரே மாதிரியாகவே இருக்கும்.
-கவிதை குழல்
2. மகிழ்ச்சி
சுற்றத்தாருடன் இணைந்து வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியைத் தரும்.
சுற்றதாரிடம் இருந்து விலகியிருப்பது மகிழ்ச்சியைத் தராது.
-கவிதை குழல்
3. மனம்
மனம் கலந்து பேசும் உறவே நீடிக்கும்.
அது போலவே சுற்றத்தாருடன் உறவு நீடிக்க
மனம் கலக்க வேண்டும்.
-கவிதை குழல்
4. தேவையை பூர்த்தி செய்!
சுற்றத்தார் எப்போதும் தம்முடன் இருக்க வேண்டுமெனில்,
அவர்களுக்கு தேவையானவற்றை அளிக்க வேண்டும்.
-கவிதை குழல்
5. உறவு – பொருள்
மனிதர்களில் உறவைக் கண்டு இணைவோரும் உண்டு.
பொருளைக் கண்டு இணைவோரும் உண்டு.
-கவிதை குழல்
6.பலம்
பலம் என்பது
தனித்திருப்பது அல்ல.
கூட்டாக இணைந்து
இருப்பது ஆகும்.
-கவிதை குழல்