பொருள்-சோம்பல் கொள்ளாமை |Kavithai Kuzhal – Tamil Kavithaigal
பொருள்-சோம்பல் கொள்ளாமை |Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
”சோம்பல் கொள்ளாமை” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை காண்பதற்கு முன்பாக சோம்பல் என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சோம்பல் தான் எவ்வித முயற்சிக்கும் தடையை ஏற்படுத்தும் தடைக்கல்லாகும்.
ஏனென்றால், ஒருவன் சோம்பல் கொண்டால் அவனால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.
அதாவது, சோம்பல் காரணமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் அப்புறம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்படுவான்.
சோம்பல் கொண்டு ஒருவன் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருந்தால் அவனால் வெற்றியை பெற முடியாது.
சோம்பலை ஒழித்தால் மட்டும்தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும்.
சோம்பல் கொண்டிருந்தால் முயற்சியை மேற்கொள்ள முடியாது.முயற்சி மேற்கொள்ளவில்லை என்றால் எந்தவொரு செயலிலும் வெற்றி அடைய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சோம்பல், மறதி, ஒரு செயலை தாமதமாக செய்தல்,அளவு கடந்த உறக்கம் போன்றவற்றால் செயலானது பாதிப்படையும்.
ஒருவன் சோம்பல் கொண்டு, மறதி காரணமாக உறங்கி, ஒரு செயலை தாமதமாக செய்தால் அச்செயலால் அவனுக்கு எந்த எவ்வித பலனுமில்லை.
உரிய நேரத்தில் செய்யப்படும் செயலுக்கே மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
அதாவது, பணியை விரைவாக முடிக்கும் செயலாற்றலை கண்டு, அதற்கான ஆதாயமும் கிடைக்கும்.
எவ்வித வேலையும் செய்யாமல் சோம்பல் கொண்டிருந்தால் அனைவரின் பழி சொல்லுக்கும் ஆளாக நேரிடும்.
உதாரணமாக, ஒரு கதையை கூறிகிறேன்.
ஏன் சோம்பல் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்விர்கள்.
ஒரு சிறிய நிலப்பரப்பை, ஒரு அரசன் ஆண்டு வருகிறான்.அந்த ஊரில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மற்றும் பொன் வழங்குதல், தானியம் வழங்குதல், குடில் அமைத்து தருதல், ஆலயம் கட்டுதல் ஆகிய அனைத்து செயலையும் சிறப்பாக செய்து ஆட்சி செய்கிறான்.
நாம் எந்த ஒரு செயலையும், ஒருவருக்கு தொடர்ந்து செய்து வந்தால், அவர்கள் அச்செயலை தொடர்ந்து நம்மிடமே கொடுத்து விடுவார்கள் அல்லவா.
உதவி செய்தது தவறு ஆகிவிட்டதே என்று எண்ணும் நிலைக்கும் ஆக்கி விடுவார்கள்.
இதுபோல தான், அரசன் மக்களுக்கு நற்சேவையை புரிந்து வந்ததால், அனைவரிடத்திலும் நாம் எந்த ஒரு செயலையும் செய்ய இனி தேவையில்லை நமக்காக அரசர் இருக்கிறார் என்ற நிலையை மனதில் உருவாகி விடுகின்றது.
அதாவது, மக்களிடத்தில் சோம்பல் உணர்வானது மேலோங்கி விட்டது.
இதனால் நாட்டில் எந்த ஒரு வேலையும் மக்கள் செய்யாமல் இருப்பதால், நாட்டின் செல்ல வளமும் குறைந்தது.
இதனால், இதுவரை நல்ல சேவையை புரிந்த அரசனாலும் எவ்வித நன்மையும் செய்ய முடியவில்லை.
மக்கள் பெரிதும் துன்பம் அடைந்தார்கள்.
இதனை கண்ட அரசன், அரச சபையையும், மக்களையும் கூட்டி இதுவரை நீங்கள் உழைத்து கொண்டிருந்ததால் உங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது.
அரசன் நமக்கு நன்மை செய்கிறான் என்று எண்ணி சோம்பல் கொண்டதால் தான் துன்பத்தை அடைந்தீர்கள் என்று கூறினார்.
இதனை கேட்டதும், மக்கள் தங்கள் தவறை உணர்ந்து இனி நாங்கள் சோம்பல் கொள்ளமாட்டோம் என்று உறக்க சொல்லி உழைக்க தொடங்கினர்.
அன்றிலிருந்து மக்களும், நாடும் வளர்ச்சியை கண்டது.
இதிலிருந்து சோம்பல் ஒன்று மட்டுமே எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து இருப்பீர்கள்.
இனியாவது, சோம்பல் கொள்ளாமல் வெற்றி மாலை சூடுங்கள்.
இனி, “கவிதை குழல்” கவிதைகளின் வாயிலாக “சோம்பல் கொள்ளாமை” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை கண்டு சோம்பலை தவிருங்கள்.
1.சோம்பல்
முயற்சியை தடுக்க கூடியவன் ஒருவனே.
அவனே, சோம்பல் ஆவான்.
சோம்பல் தவிர்த்து
முயற்சி மேற்கொண்டு
வெற்றி மாலை சூடுங்கள்…
– கவிதை குழல்
