பொருள் – பகைமை | Kavithai Kuzhal

வணக்கம்!

பகைமை என்ற தலைப்பின் வாயிலாக ஒரு மனிதனானவன் எவ்விதத்தில் தன்னுடைய வாழ்க்கையை பகையால் இழக்கிறான் என்பதை கவிதைகள் வாயிலாக பார்க்கவிருக்கிறோம்.

பகை என்பது ஒரு தீய குணம் ஆகும்.ஒருவர் மற்றொருவர் மீது பகை கொண்டிருக்கும் முக்கிய காரணமே அவரிடம் இருக்கும் ஏதாவது ஒன்றாவது இவரிடம் இல்லாமல் இருக்கும்.

பகையானது பொறாமை பேராசை போன்றவற்றால் ஒரு மனிதனுக்குள் உருவெடுக்கின்றது. இது நாளுக்கு நாள் பெருகி அவனை தீய வழிகளில் செலுத்தி மற்றவர்களை அழிக்க தூண்டுகிறது.

பகையானது மனிதர்கள் இடத்தில் பல வகைகளில் உண்டாகும்.பகையானது ஒருவனது உள்ளத்தில் நாளுக்கு நாள் மேலோங்கி இருந்தால் அது அவனை அழித்துவிடும்.

பகை உள்ளம் கொண்டவர்களை கண்டால் அஞ்சி வாழ வேண்டும். ஏனென்றால் எந்த நேரத்தில் என்ன தீங்கு செய்வார்கள் என்று நம்மால் யூகிக்க கூட முடியாது.

ஒருவர் தங்கள் மீது பகைமை கொண்டிருந்தாலும், பிறகு வந்து இனிமையாகப் பேசினாலும் அவரை நம்புதல் கூடாது.

இனிமையாக முகத்தில் தோன்ற பேசினாலும் அவரது உள்ளத்தில் இருக்கும் தீயானது என்றும் அணையாமல் தான் இருக்கும்.

பகைமை கொண்டவர்கள் நல்லவர்களை அழிக்க, தக்ககாலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் ஆவார்கள். இத்தகைய நபர்களை அழித்தலும் சிறந்ததாகும்.

உதாரணமாக ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொண்டு அந்த நாட்டின் வளத்தை அழிக்க நினைக்கின்றனர்.

இவ்வாறு ஒரு நாட்டின் மீது பகைமை உருவானதன் காரணமாக,  அந்த நாட்டில் எந்த நற்செயல்கள் நடந்தாலும் அது அவர்களுக்கு பெரும் பாதிப்பாக கருதி அதனை செய்ய விடாமல் தடுக்க முற்படுகிறார்கள்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும் அந்த நாடானது இருக்கும்.

ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு தனி குடும்பத்தின் மீதோ பகைமை உண்டாகிவிட்டால் அந்த பகமையானது என்றும் நீங்காது.

என்னதான் வெளிப்புறத்தில் மகிழ்ச்சி காட்டினாலும், உள்ளத்தில் ஒளிந்திருக்கும் தீ எண்ணத்தை என்றும் மாற்ற இயலாது அல்லவா.

பகைமையை வளர்ப்பது சரியல்ல தான்.ஒருவன் பகைமை கொண்டு இருக்கும் போது நாம் விழிப்புடன் இருத்தல் வேண்டும். ஏனென்றால் எந்த நேரத்தில் என்ன தீங்கு விளைவிப்பான் என்று நமக்குத் தெரியாது.

பகைமையானது மனதில் உண்டாகிவிட்டால் அழிவுதான் நிச்சயமாகும்.

உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில் பகைமை கொள்ளாமல் வாழ வேண்டும்.

இனி,கவிதைகளின் வாயிலாக பகையுள்ளம் கொண்டவர்களின் நிலையையும் மற்றும் அவரால் ஏற்படும் தீங்குகளை தடுக்கும் வழிமுறைகளையும் காணலாம்.

 

1.பகைவர்களின் பெருமிதத்தை அழிக்கும்

ஒரே ஆயுதம் பொருளீட்டுவது ஆகும்.

 

2. பகைமை கொண்டவர்கள் சிரித்துப் பேசினாலும்,

உள்ளத்தில் நஞ்சானது குடி கொண்டிருக்கும்.

 

3.எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று

புரியாமல் இருக்கும் நிலையில் பகைவரைக்

கண்டால் அஞ்சி இருக்க வேண்டும்.

 

4. பகை உள்ளமானது ஒருவனிடத்தில் தொடர்ந்து

மேலோங்கினால் அது அவனை அழித்துவிடும்.

 

5. ஒருவர் செய்யும் தீங்கினை மறத்தலே,

பகைமையை உண்டாக்குவதை தடுக்கும்.

 

6.வாழும் வாழ்க்கையோ, சில காலம் தான்.

சுற்றம் சூழ இணைந்து வாழுங்கள்.

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *