மனம் மாறுவதில்லை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
மனம் மாறுவதில்லை!
காலங்கள் பல கடந்தாலும்
நல்லோர் பலர்
வாழ அறிவுரை கூறியிருந்தாலும்
சில மனிதர்களின் மனநிலையானது
என்றும் மாறுவதில்லை.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
வணக்கம்!
மனிதன் தோன்றிய காலம் ஆனது எது? என தெரியாமல் இருந்தாலும், மனிதன் இன்பாக வாழ வகுத்த முறையானது இன்றும் வியக்க தக்க வகையில் தான் உள்ளது.
நம் முன்னோர்கள் பல இன்னல்களை சந்தித்து, இவ்வாறு நீ வாழடா? இல்லையென்றால் நீ துன்படப்படுவாய்! என்று கூறி இருந்தாலும், அதை நாமோ கடைபிடிப்பது இல்லை.
ஒவ்வொரு மனிதனும் நல்லெண்ணம் கொண்டு இருந்தால், இவ்வுலகில் ஒருவருக்கு கூட துன்பம் என்ற நிலை உருவாகி இருக்காது.
மனதில் தீய எண்ணங்களை விதைக்காமல், நல்ல எண்ணங்களை விதைக்க ஆரம்பியுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.