மனிதம் காப்போம்!
மனிதம் காப்போம்!
நோய் ஏற்படும் போது
பாதுகாப்பு உணர்வு.
பிரச்சினை ஏற்படும் போது
நிர்வாக திறமை.
உயிர் பிரியும் போது
உறவு பாசம்.
மாற்றங்களை புரிந்து கொள்.
– கவிதை குழல்.
மனிதம் கவிதை விளக்கம்:
வணக்கம்!
இக்கவிதையின் வாயிலாக மூன்று விதமான சிந்தனைகளை புரிந்து கொள்ளலாம்.
ஒன்று: ஒவ்வொருக்கும் நோய் ஏற்படும் போது தான், நாம் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
உடல்நிலை சீராக இருக்க வேண்டும் என்ற அக்கறையும், அப்போது தான் மனதில் உண்டாகின்றது.
இரண்டு: ஒரு தொழிற்சாலையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
அத்தொழிற்சாலையில் பிரச்சினைகள் உருவாகும் போது தான், நிர்வாக திறமையானது சிறப்பாக வெளிப்படும். அதாவது, எப்போதும் அக்கறையுடன் விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும்.
மூன்று: உறவுகளுக்கு இடையே எவ்வளவு தான், பிரச்சினைகள் இருந்தாலும் ஒருவர் இறக்கும் தருவாயில் ஒன்றிணைந்து விடுவார்கள்.
அப்போது இருக்கும் பாச உணர்வானது எல்லா நேரங்களிலும் இருந்தால் என்றும் உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி தான்.
இவற்றையெல்லாம் காணும் போது, ஒரு மனிதன் அக்கறையுடன் விழிப்புணர்வோடு உறவுகளோடு பாசம் கொண்டு என்றும் வாழ்தலே அனைவருக்கும் நலத்தை தரும்.
வாழ்க்கையை புரிந்து கொள்ள முயலுங்கள்!
நன்றி…
– கவிதை குழல்.