இயற்கையே மருந்து!
அனைத்திற்கும் மருந்து உண்டு.
ஆனால், கிடைப்பது அரிது.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
இயற்கையில் நமது உடலை பாதுகாக்கும் வகையில் அனைத்து வகையான பொருட்களும் உணவாகவே கிடைக்கின்றன.
ஆனால், அதற்கு முதலில் மருத்துவ குணம் வாய்ந்த உணவு பொருட்களை உணவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இயற்கையில் கிடைக்கும் உணவு பொருள்களை விட்டு என்று செயற்கைக்கு மாறினோமோ, அன்றே நமது உடலுக்கு அனைத்து விதமான நோய்களும் உருவாகின.
நாம் உட்கொள்ளும் உணவை சரிவர எடுத்துக்கொண்டால் போதும். அதுவே, தம் உடலை பாதுகாக்கும் நிவாரணியாகும்.
உடலை பாதுகாக்க வேண்டுமெனில், இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
இயற்கையே அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கும்.
இயற்கை உணவை, சக்தியாக உடலோடு இணைக்க ஆரம்பியுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.