கடந்து செல்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
கடந்து செல்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
உயரமும் துயரமும்
கடந்து சென்றால் தான்
“இன்பம்”.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
கடந்து செல்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தில் ஒர் உயரத்தை அடைய வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
தனக்கான உயரத்தை அடைய செல்லும் போது அதில் ஏற்படும் இன்னல்கள் ஏரளாம் ஆகும்.
பல வித துன்பங்களை ஏற்படுவதைக் கண்டு வருந்தாமல் தனக்கான செயலில் இடைவிடாது இடுபடுதல் வேண்டும்.
ஒரு செயலை இடைவிடாது செய்தால் மட்டும் தான் அதில் முழுமையாக நிலைப்பெற்று அதில் வெற்றி காணவும் முடியும்.
உதராணமாக சொல்ல போனால், ஒரு மலையில் ஒரு நபர் எடுத்துக் கொள்வோம். அவர் மலையின் உச்சியை அடைய, செல்லும் பாதை ஆனது கடினமாக இருக்கும். அதோடு மட்டுமில்லாமல்,மலை ஏறும் தருவாயில் பல இன்னல்களை சந்திக்கவும் நேரிடும்.
அவர் மலையின் உச்சியை அடைந்தால் மட்டும் தான் இன்பம் ஆனது உருவாகும்.
அதுபோல தான், எந்த ஒரு செயலை மேற்கொள்ளும் போதும், அதில் இடையூறுகள் உருவாக தான் செய்யும்.
செயலில் இடையூறுகள் உருவாவதைக் கண்டு வருந்தாமல், வெற்றியை அடைந்தே ஆக வேண்டும் என முயற்சியை தொடர வேண்டும்.
செயலில் உயரத்தை அடைந்தால் மட்டும் தான் மகிழ்ச்சியானது உருவாகும்.
நன்றி!
– கவிதை குழல்