முயற்சி கவிதை – சோர்வு கொள்ளாதீர்!
முயற்சி கவிதை – சோர்வு கொள்ளாதீர்!
அளவான தூக்கம் முயற்சியை ஊக்குவிக்கும்.
அளவு கடந்த தூக்கம் முயற்சியை வீணாக்கும்.
– கவிதை குழல்
முயற்சி கவிதை விளக்கம்:
வணக்கம்!
முயற்சி கவிதை ஆனது ஒருவன் முயற்சியில் ஈடுபடுகின்றான் எனில் அவன் உறக்கத்தை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி குறிப்பிடுகின்றது.
ஒவ்வொரு மனிதனும் உடல் களைப்பை போக்கவும் மற்றும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உறங்குவான். ஒருவன் சரிவர உறங்கவில்லை என்றால், அதனால் அவனுக்கு பாதிப்பானது ஏற்படும்.உறங்கினால் மட்டும் தான் உடலுக்கு ஏற்றவாறு புத்துணர்ச்சி அடையும்.
ஒருவன் சரிவர உறங்கினால் மட்டும் தான் மேற்கொண்ட செயலை செய்ய ஆற்றலானது உருவாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான் மனதில் பலமானது உருவாகும்.
ஒரு செயலை மேற்கொள்ள உடல் பலத்தை விட மன பலமானது இன்றியமையாததாகும்.
உலகில் உள்ள மக்களில் சிலர் தமக்கு தூக்கமே வரவில்லை என்று புலம்புகிறார்கள். சிலரோ அளவு கடந்து தூக்கத்தை கொள்கிறார்கள்.
சரி. அளவு கடந்த தூக்கம் என்றால் என்ன? கேள்வியானது மனதில் எழும்.
அளவு கடந்த தூக்கம் என்னவென்றால், உடலுக்கு தேவையான போதிய ஒய்வு கிடைத்தும் அதற்கும் அதிகமாக உறங்குவது தான்.
உலகில் உள்ள மக்களில் சிலர் ஏன் தூக்கம் வரவில்லை என்று புலம்புகிறார்கள் என்றால், அவர்களின் மன நிலையே காரணமாகும்.
நிம்மதியாக தூங்க வேண்டுமெனில், மனதில் எவ்வித சிந்தனையும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
உண்மையை சொல்ல போனால், நிம்மதியாக தூங்க வேண்டுமென்றால், செய்யும் செயலிலே நிம்மதியானது வேண்டும்.
செயலை மேற்கொள்ளும் போது நல்வழியையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே மன நிம்மதிக்கு வித்திடும்.
தேவை என்பது ஒன்று வாழ்வில் உருவாகும் போதே, அதை பூர்த்தி செய்ய செயலை மேற்கொள்கிறோம்.
செயலில் ஈடுபடும் போது பல இன்னல்கள் ஏற்பட்ட பிறகு தான் அதற்கான ஆதாயமும் கிடைக்கும்.
எவ்வித துன்பங்களையும் கடக்க மனதில் வலிமையை உருவாக்கி கொள்ள வேண்டும்.
செயலில் உழைத்த உழைப்பிற்கு உடலானது சோர்வடையும். இவ்வாறு உடலானது சோர்வடையும் தருவாயில் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியமாகும். ஓய்வு எடுத்தால் மட்டும் தான் மேலும் செயலை மேற்கொள்ள முடியும்.
உடல் களைப்பை தீர்க்க ஓய்வெடுத்தல் வரை நல்லது. ஆனால் அதுவே அளவுக்கு மீறி, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்ளலாம் என்று உறக்கத்தை தொடங்கினால் செய்யும் செயலில் காலவிரயம் ஆனது ஏற்படும்.
செயலில் தாமதமானது உருவாகினால், உற்பத்தி செய்யப்படும் பொருள்களிலும் அளவும் குறையும். இதனால் தேவைகளை பூர்த்தி செய்வதில் காலதாமதம் ஏற்படும்.
மக்களின் தேவையை யார் முதலில் பூர்த்தி செய்கிறார்களோ, அவர்களிடத்தே அதிக விற்பனை ஆகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அளவுக்கு மீறிய தூக்கம் மேற்கொண்டால் செயலில் கால விரயம் ஏற்பட்டு, பொருள் உற்பத்தி குறைந்து, பணம் சம்பாதிப்பது விகிதமும் குறைகின்றது.
அளவுகடந்த தூக்கத்தால் பணத்தட்டுப்பாடு உருவாகி, ஒருவனின் நிதி நிலைமையும் மோசமாகின்றது.
இதனால் எந்த ஒரு தேவையையும் அவனால் முழுமையாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.
தூக்கம் ஆனது நன்மையை விளைவிக்கும் என்றாலும், அளவு கடந்த தூக்கமானது பாதிப்பை ஏற்படுத்தும்
”அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழி நினைவு கூர்ந்து பாருங்கள். அதுபோலத்தான் அளவுக்கு மீறினால் தூக்கமும் அழிவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் வெற்றியடைய வேண்டுமெனில் அளவு கடந்த தூக்கத்தில் இருந்து விடுபடுதல் வேண்டும்.
நன்றி!