சாதிக்க வேண்டும்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

சாதிக்க வேண்டும்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

சாதிக்க வேண்டுமெனில்,

தன்னலம் இன்றி

உழைத்தல் வேண்டும்.

– கவிதை குழல்

சாதிக்க வேண்டும்! | Kavithai Kuzhal - Tamil Kavithaigal

 

கவிதை விளக்கம்:

சாதிக்க வேண்டும்! 

வணக்கம்!

தன்னலம் என்பது, ஒருவன் தனக்கு தேவையானதை மட்டும் செய்து கொண்டு மற்றவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இருத்தலாகும்.

தன்னலம் கொண்டு வாழ்ந்தால் மட்டும், உலகத்தின் பயனை அடைய முடியுமா! என்ன?. 

உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் ஒருவொருக்கொருவர் உறுதுணையாக இருந்தால் அல்லவா! சாதிக்க முடியும்.

உலகில் சாதித்த அனைத்து மனிதர்களும் தன்னலம் கருதாமல், பொது நலத்திற்காக பாடுபட்டவரகளே ஆவார்கள்.

 பொது நலத்திற்காக பாடுபட்டால் மட்டும் தான், தன்னுடைய வாழ்க்கையை மட்டுமில்லாமல் அனைவரது வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியை அளிக்க முடியும்.

தன்னலம் ஒரு நாள் தன் அழிவிற்கே வழிவகுக்கும். சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் பொது நலத்திற்காக தன் ஆற்றலை பயன்படுத்துங்கள்.

சாதிக்க முயற்சி செய்ய வேண்டும். பொது நலம் அனைவரது வாழ்க்கைக்கும் இன்பத்தை தரும்.

–  கவிதை குழல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *