தன்னிலை அறிதல்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
தன்னிலை அறிதல்! | Kavithai Kuzhal
உன் சுய தன்மையை அறிந்து,
அதற்கு ஏற்ப செயல் படு.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
தன்னிலை அறிதல்! | Kavithai Kuzhal
வணக்கம்!
பெரும்பாலும் அனைவரும் மற்றவர்களைப் புரிந்து கொள்ள செலுத்தும் நேரத்தின் அளவைக் கூட தன்னை தானே அறிந்து கொள்ள நேரத்தை செலுத்துவதில்லை.
ஒருவன் தன்னை எவ்வாறு புரிந்து கொள்கின்றானோ, அதனைப் பொறுத்தே அவன் எச்செயலையும் செய்ய ஆற்றலானது பிறக்கும்.
ஒருவன் தன்னை புரிந்து கொள்வதன் மூலமாக செயல் ஆற்ற முடியுமா? என்ற கேள்வி ஆனது மனதில் எழும்.
உண்மைதான். ஒருவன் தன்னுடைய திறமையை அறிந்து கொள்வதன் மூலமாக அதற்கு ஏற்றவாறு அனைத்துச் செயல்களிலும் ஈடுபட முடியும். அப்போது மட்டும் தான் எடுத்த காரியத்தை முடிக்கவும் முடியும்.
தன்னுடைய சுய தன்மையை அறியாமல் இருந்தால் எந்த ஒரு செயலையும் செய்வதற்கான காலமானது அதிகமாகி கொண்டே போகும்.
தான் செய்யவிருக்கும் ஒரு வேலையை, தனக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டால் மட்டும் தான் செயலை எளிமையாக முடியும்.
உதராணமாக சொல்ல போனால், ஒரு நிறுவனத்தில் ஒரே மாதிரியான வேலையை அனைவரும் செய்வார்கள். ஆனால் இவர்களிடத்தில் வேலை செய்யும் விதமானது வேறுபடும்.
எனவே, எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாக இருந்தாலும் அதனை தனக்கு தகுந்த விதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
சுய தன்மையை அறிந்து முயற்சியில் ஈடுபடு.
நன்றி!
– கவிதை குழல்.