தயக்கம் தவிர்! – முயற்சி கவிதை | Kavithai Kuzhal
தயக்கம் தவிர்! – முயற்சி கவிதை| கவிதை குழல்!
திறமை இருந்தும் வெளிப்படுத்த
தயங்குபவர்கள் தான் இவ்வுலகில் அதிகம்.
தயங்கினால் சரித்தரம் படைக்க முடியாது
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தயக்கத்தை விடுத்து சாதனை
படைக்க முன்னேறுங்கள்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
தயக்கம் தவிர்! – முயற்சி கவிதை| கவிதை குழல்!
வணக்கம்!
உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் அரும்பெரும் ஆற்றலுடையவனாகத் தான் பிறக்கின்றன.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி திறமைகள் உள்ளன. அனைத்து மனிதர்களும் தன்னுடைய திறமையை அறிந்து கொள்வதற்கான கால சூழ்நிலையானது வேறுபடுகின்றது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் அனைத்து மனிதர்களுக்கும் தனது திறமையானது உறுதியாக வெளிப்படும். தனது திறமையை அறியும் பட்சத்தில் அதனை முழுமையாக யார் பற்றிக் கொள்கின்றார்களோ, அவர்களே உயர்ந்த நிலையையும் அடைகிறார்கள்.
ஒருவன் தன்னுடைய திறமையின் மீது கவனம் செலுத்துவதன் மூலமாக அதனால் அளப்பரிய பயன் ஆனது அவனுக்கு உண்டாகின்றது.
தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை விடுத்து வேறு வழியில் சென்றால் அதனால் நீங்க முடியாத துன்பம் தான் உண்டாகி கொண்டே இருக்கும்.
உண்மைதான். மனதிற்கு பிடித்த, தனக்கு தெரிந்த ஒரு கலையை வெளிப்படுத்துவதன் மூலம் உள்ள மகிழ்ச்சியானது வேறு எதிலும் இருக்காது.
எனது நிதி நிலைமையை போக்க நான் வேறு ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறேன். குடும்பத்தில் வறுமையானது இருக்கும் பட்சத்தில் என்னால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியும் எழும்.
எனது திறமையை வெளிப்படுத்தி அதற்கான கால அவகாசம் என்னிடம் இல்லை. இது போன்ற நிலைமையானது அனைவருக்கும் உருவாக்கத்தான் செய்யும்.
உலகத்தில் சாதனை படைக்க வேண்டும் எண்ணும் அனைத்து மனிதர்களுக்குமே இது போன்ற சூழ்நிலையானது உருவாக்கத்தான் செய்யும்.
எனவே, எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை சாதித்தால் மட்டும் தான் தீர்க்க முடியும் என அறிந்து தனது திறமையின் மீது நம்பிக்கை கொண்டு விடாமுயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் அடைந்து தனது வறுமைச் சூழலை போக்க வேண்டும்.
உலகத்தில் சாதனை படைத்த அனைத்து மனிதர்களின் நிலைமையும் தொடக்க காலத்தில் இதுவே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சாதனை படைக்க வேண்டுமெனில், வறுமையை கடந்து செல்ல தான் வேண்டும். வறுமையை காரணம் காட்டி திறமையை வெளிப்படுத்த தயங்காதீர்கள்.
திறமை இருந்தும் அதனை வெளிப்படுத்த தயங்குவது என்பது தனது வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நிமிடத்தையும் இழப்பதற்கு சம்மாகும்.
மனித வாழக்கையில் மகத்துவம் புரிந்திட வேண்டுமெனில், துன்பங்களை கடக்க வேண்டும். தயக்கத்தை உடைத்து சாதனை படைக்க முன்னேறுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.