மனநிறைவு கவிதை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
மனநிறைவு கவிதை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வெற்றியைக் கண்டு பூரிப்பும் கொள்ளத் தேவையில்லை.
தோல்வியைக் கண்டு வருத்தமும் கொள்ள தேவையில்லை.
நிறைவு கொள்ளுங்கள்.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
மனநிறைவு கவிதை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியும் அடையலாம். தோல்வியும் அடையாளம். ஆனால் செய்த செயலில் மனநிறைவு உண்டாகின்றதா என்பது தான் முக்கியமாகும்.
மனநிறைவு உண்டானால் மட்டும் தான், செய்யப்படும் செயலை சரியாக செய்கிறோம் என்ற நிம்மதியானது மனதில் உருவாகும்.
மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்திற்கும் வெற்றியானது உடனடியாக கிடைப்பதில்லை. செயல்களை மேற்கொள்ளும்போது தோல்வியடைந்தாலும் முயற்சியை விட்டு விடுதல் ஆகாது.
செயல்களில் தவறை திருத்திக்கொண்டு, செயலில் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
வெற்றிகளும் தோல்விகளும் என்றும் நிரந்தரம் இல்லை.
செய்யப்படும் செயல்களில் மனநிறைவு உண்டாக்கினால் போதும் என செயலை ஆற்றுங்கள்.
நீங்கள் எண்ணியநு உங்களை வந்தடையும்.
நன்றி!
– கவிதை குழல்