ஒப்பிடுவது ஏன்? | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
ஒப்பிடுவது ஏன்? | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
விதைக்கும் விதைகளும்
ஒரே மாதிரியான
விளைப்பயனை தருவதில்லை.
பிறக்கும் மனிதர்களும் ஒரே மாதிரியான
விளைப்பயனை தருவதில்லை.
பிறகு ஏன் ஒப்பிடுதல்?
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
ஒப்பிடுவது ஏன்? | Kavithai Kuzhal
வணக்கம்!
கவிதையானது பிறக்கும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வினைப்பயனை தருவதில்லை என்பதை உணர்த்துவதற்காகவே பதிவிட பட்டதாகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி திறமைகள் தான் காணப்படுகின்றன.
ஒருவனை காலத்தின் சூழலால், உடன் இருப்பவர்களின் கட்டாயத்தால், நீ இதைத்தான் செய்ய வேண்டும், நீ இதனால் தான் பயனடைவாய் என ஆசை வார்த்தைகளை கூறி அவனது பாதையில் இருந்து விலக்கி விடுகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் ஒருவனை மற்றொரு நபருடனுடன் ஒப்பிட்டு, அவனை வேதனைக்கும் உள்ளாக்குகிறார்கள்.
ஒருவனது வாழ்வை மேம்படுத்த வழியை கூற வேண்டுமெனில், முதலில் தான் எப்பயனை தன் வாழ்வில் அடைந்தோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
உதரணமாக சொல்ல போனால், வயல்களில் விதைக்கப்படும் விதைகளை எடுத்துக் கொள்வோம். மண்ணில் விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் ஒரே மாதிரியான விளைப்பயனை தருகின்றனவா? இல்லை தானே.
அதுபோல தான், பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் திறன் ஆனது வேறுப்பட்டு தான் இருக்கும். ஒருவனை போல் மற்றொருவன் இருக்கவும் மாட்டான்.
இனியாவது ஒரு நபரை மற்றொரு நபரோடு ஒப்பிட்டு கூறும் பழக்கத்தை கைவிடுங்கள்.
வாழ்வின் யாதர்த்தை புரிந்து கொள்ள முயலுங்கள்,
நன்றி.
– கவிதை குழல்.