வாழக்கை தத்துவம் – தேடலுக்கான விடை உன்னிடத்திலே! | Kavithai Kuzhal
வாழக்கை தத்துவம் – உன் தேடலுக்கான விடை உன்னிடத்திலே!
உன் வாழ்க்கையை
உன் வாழ்வில் நிகழ்ந்த
பல சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்.
உன் தேடலுக்கான விடை
அங்கு தான் ஒளிந்திருக்கின்றன.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
வாழக்கை தத்துவம் – தேடலுக்கான விடை உன்னிடத்திலே!
வணக்கம்!
வாழ்க்கையில் நாம் எல்லோரும் எண்ணற்ற பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்.
சில நேரங்களில் பல கேள்விகளுக்கான விடைகள் நம் சிந்தனைக்கு புலப்படுவதில்லை. அவ்வாறு இருக்கையில் நமது கேள்விகளுக்கான விடையை நாம் எங்கு தான் தேடுவது என்ற சந்தேகமானது நம்மில் எழும்.
இதற்கான தீர்வு என்னவென்றால் நம் வாழ்வில் இதுவரை நடந்த பல சம்பவங்களை இப்போது ஏற்பட்டிருக்கும் கேளவிகளோடு ஒப்பிட்டு பார்ப்பதே ஆகும்.
வாழ்க்கையில் இறந்த காலத்தில் என்ன செய்தோமோ? அதற்கான விளைப்பயனையே நிகழ்காலத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நிகழ்காலத்தில் ஒரு செயலை மேற்கொள்ளும் போதோ அல்லது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் போதோ, அதனால் பல கேள்விகள் நம்முள் தோன்றலாம். இதற்கான அனைத்து விடயங்களும் இறந்த காலத்தில்தான் பெறமுடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இறந்தகால வாழ்வானது முடிந்து விட்டது என்று கொள்ளாமல், அதில் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை சேகரித்தும் வைத்தல் வேண்டும்.
சேகரித்து வைக்கப்படும் ஒவ்வொரு தகவல்களுமே நம்முடைய நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பல தீர்வுகளை வழங்க வல்லன.
இறந்த காலத்தில் ஒருவன் பெற்றிருக்கும் அறிவு ஆனது நிகழ்காலத்தில் அவனுடைய வாழ்வை மேம்படுத்த செய்ய உதவுகின்றது.
நிகழ்காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு இறந்தகால வாழ்விலிருந்தே கிடைக்கின்றது.
வாழ்க்கையில் நம் தேடலுக்கான விடயமானது எங்கும் கிடைக்கவில்லை என்று கருதாமல், வாழ்வில் கண்ட பல சம்பவங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். அங்குதான் தீர்வு கிடைக்கும்.
வாழ்க்கை ஒருமுறை தான், மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
நன்றி
– கவிதை குழல்