வாழ்க்கை கவிதைகள் – வாழ்க்கை பயணத்தை தொடங்குவாய்! | Kavithai Kuzhal
வாழ்க்கை கவிதைகள் – வாழ்க்கை பயணத்தை தொடங்குவாய்! | Kavithai Kuzhal
உன்னை பற்றி எப்போது
நீ அறியத் தொடங்குகிறாயோ,
அப்போதே உன் பயணத்தையும்
நீ தொடங்குவாய்!
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
வாழ்க்கை கவிதைகள் – வாழ்க்கை பயணம்!
ஒரு மனிதனானவன் எப்போது தன்னை உணர்ந்து கொள்கின்றானோ, அப்போதே அவனது வாழ்வின் இலக்கும் அவனிடத்தில் உதயமாகிறது.
இலக்கை அறிந்தால் மட்டும் தான் வாழ்க்கையின் பயணத்தை தொடங்க முடியும்.
இல்லையென்றால் பாதை எதுவென புரியாமல் மனம் தடுமாறித்தான் காணப்படும்.
ஒருவனிடத்தில் தன்னைப் பற்றிய புரிதல் எப்போது உண்டாகிறதோ, அப்போது மட்டும் தான் தன்னுடைய திறன் அறிந்து, அதற்கு ஏற்றவாறு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்ள முடியும்.
திறன் அறிந்தால் தான், வாழ்வின் பயணமும் ஒவனுக்கு உருவாகின்றது.
வாழ்க்கை பயணத்தை தொடங்க வேண்டும் எனில், தன்னைப் பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் உண்டாகி இருத்தல் வேண்டும்.
தன்னை பற்றிய புரிதலை அறிந்து கொள்ள ஆரம்பியுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்