வாழ்க்கை கவிதை – பணத்தால் உருவாவதில்லை!

வாழ்க்கை கவிதை – பணத்தால் உருவாவதில்லை!

மதிப்பும் மரியாதையும் 

பணத்தால் உருவாவதில்லை. 

அவரவர் செய்யும் நற்செயல்களைப்

பொறுத்தே உருவாகின்றன.

சிந்தித்து பாருங்கள்!

 –  கவிதை குழல்

 வாழ்க்கை-கவிதை-பணத்தால்-உருவாவதில்லை-Kavithai-Kuzhal.

 

கவிதை விளக்கம்:

வாழ்க்கை கவிதை – பணத்தால் உருவாவதில்லை:

வணக்கம்!

வாழ்க்கை கவிதை ஆனது பணம் மட்டுமே அனைத்தையும் தரவல்லது என்று எண்ணுவோர்க்கு, வாழ்வின் உண்மை நிலைமையை எடுத்துரைக்கும்.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக, தொழில் தொடங்கி பணத்தை சம்பாதித்து வருகின்றனர். பணத்தை சம்பாதிக்கும் தருவாயில் மனிதனின் மனநிலையானது முற்றிலும் மாறி விடுகின்றது. 

ஒருவன் தன் கையில் இருக்கும் பணத்தை தன் பலம் என நினைத்துக்கொண்டு மற்றவர்களை மதிக்க கூட செய்வதில்லை. அதோடு மட்டுமில்லாமல் பணத்தால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் என்ற மனநிலை உருவாக்கி கொள்கிறான்.

பணத்தின் மேல் பற்றுக் கொண்ட ஒருவனுக்கும், பணத்தின் மேல் பற்று இல்லாதவனுக்கும் மனநிலையை ஒரு நிகழ்வின் மூலமாக விரிவாக காணலாம். 

ஒரு ஊரில் ராமு என்ற செல்வந்தர் வசித்து வருகிறார். அந்த ஊரில் அவருக்கு மட்டும் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டுமென்று என்ன கூடியவராக உள்ளார். 

இவர் தன்னிடம் இருக்கும் அதீத பணத்தின் காரணமாக அவர் யாரையும் மதிக்காமல் மனதில் கர்வம் கொண்டு காணப்படுகின்றார்..

அதே ஊரில் சோமு என்ற நபர் வசித்து வருகிறார். அவர் ஏழையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு மதிப்பு மரியாதையும் வழங்குவதில் உயர்வாகவே உள்ளவர்.  

அதோடு மட்டுமல்லாமல் அவரால் இயன்ற அளவு அனைவருக்கும் உதவியை செய்து வருகின்றார். இதன் காரணமாக ஊர் மக்கள் அனைவரும் அவரை மதிக்கின்றார்கள்.

சோமு என்பவர் தன்னிடம் பணம் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளார். இவர் மட்டும் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்று அனைவரும் வியக்கும் வகையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

ஒரு ஊரில் ஒரு குடும்பம்  எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றது என்றால் அதைப் பற்றி அனைவரும் பேசத்தானே செய்வார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் சோமுவை புகழ்ந்து பேசுவதன் காரணமாக அவர் வாழும் வாழ்க்கை முறையை அனைவரும் அறியச் செய்கிறார்.

ராமு தான் அந்த ஊரில் பெரும் செல்வந்தன் ஆயிற்றே. இச்செய்தியானது அவரது காதிலும் போய் சேர்ந்தது.

நான் தான் இந்த ஊரில் பெரும் செல்வந்தன். என்னை ஒருவன் கூட புகழ்ந்து பேசவில்லையே என்று மனதில் ஒரு ஏக்கமும், அதே நேரத்தில் சோமுவின் மீது கோபம் உண்டாகின்றது.

அதோடு மட்டுமில்லாமல், அவர் மகிழ்ச்சிக்கான காரணத்தையும் அறிய வேண்டும் என எண்ணுகிறார்.

உடனே ராமு தனது வேலைக்காரனை கூப்பிட்டு, நீ போய் சோமுவை அழைத்து வா என கட்டளையிட்டார்.

வீட்டு வேலைக்காரர், சோமு இல்லத்திற்கு சென்று, ராமு ஐயா, உங்களை காண வேண்டுமாம். உங்களை கையோடு கூட்டி வரச் சொன்னார் என்று சோமுவிடம் சொல்கிறார்.

ராமு தான் அந்த ஊரில் பெரும் செல்வந்தன் ஆயிற்றே. அவரது அழைப்பை மறுக்க முடியாமல், நான் வருகின்றேன் என்று ஒப்புக்கொள்கிறார்.

சோமுவை, ராமு செல்வந்தர் அழைத்திருக்கிறார் என்ற செய்தியானது காட்டுத்தீ போல அனைவரிடத்திலும் பரவியது.

வேலைக்காரரும், சோமுவும் ராமு இல்லத்திற்கு வந்தடைந்தனர். 

சோமு: வணக்கம் ஐயா! என்கிறார். 

ராமு: ம்ம். இருக்கட்டும். உன்னை பற்றி தான் ஊர் மக்கள் அனைவரும் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னப்பா, என்ன அப்படி செய்த என கேள்வி கேட்கிறார்.

சோமு: ஐயா, நான் ஒன்னும் எந்த பெரிய காரியமும் செய்ல. என்னாள முடிந்த அளவிற்கு சின்ன சிறு உதவியை செய்து வருகின்றேன் என்றார்.

ராமு: ம்ம். சரி. நீ எப்படி தினந்தோறும் மகழ்ச்சியாக வாழ்கிறாயே?, அதற்கு என்ன காரணம் சொல்லப்பா! என்கிறார்.

சோமு: ஐயா, நான் இப்போ கூற போவதைக் கண்டு கோப படக்கூடாது என்றார்.  

ராமு: நான் கோபப்பட மாட்டேன் சொல் என்றார்.

சோமு: ஐயா, ஒருவன் மகிழ்ச்சியாக எப்போதும் வாழ வேண்டுமெனில், அவனிடத்தில் மன நிம்மதியானது இருக்க வேண்டும். மன நிம்மதி வேண்டுமெனில், அவன் தனது வாழ்க்கையில நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். அதாதவது,மனிதர்கள் அனைவரும் அறம் வழியில் செல்ல வேண்டும்.

ஒருவன், தன்னிடம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், அதனால் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் உருவாகது. ஒருவன் செய்யும் நற்செயல்களைப் பொறுத்தே, அவன் ழமதிக்கப் படுவான் என்றார்.

(இதைக் கேட்ட ராமு, தான் இது நாள் வரை செய்த தவறை என்ன என்பதை உணர்ந்தார். இனி, இருக்கும் மீதி வாழ்க்கையாவது அற வழியில் வாழ்ந்து அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என மனதில் முடிவு செய்து கொண்டார்.)

ராமு: இது நாள் வரை நான் என்ன செய்தேன் என நீ கூறிய வார்த்தையில் இருந்து உணர்ந்து கொண்டேன். என்னை தெளிவுப்படுத்தியற்கு நன்றி என்றார்.

நீ செய்யும் நற்செயல்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவியை செய்கிறேன் என்று வாக்களித்தார்.

சோமு: நன்றி ஐயா, எனக் கூறி விட்டு அவரிடத்திலிருந்து விடை பெற்றார்.

அன்றிலிருந்து ராமுவின் நடத்தையில் மாறுதல் ஆனது உருவாக தொடங்கியது.  ராமு, ஊர் மக்கள் அனைவரிடமும் அன்புடன் பேச ஆரம்பித்தார். அனைத்து நபர்களையும் மரியாதையாக நடத்தினார்.

ராமு, தான் வைத்திருக்கும் செல்வத்தை அனைவரது வாழும் செழிப்படைய பயன்படுத்தினார்.

அன்றிலிருந்து, ஊர் மக்கள் அனைவரும் எவ்வித துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர்.

ஒரு ஊரில், ஒருவர் மேற்கொள்ளப்படும் நற்செயலாலே அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால், அனைத்து நபர்களும் நற்செயல்களை செய்ய தொடங்கினால், இவ்வுலக வாழ்வானது என்றும் இன்பத்தையே தரும்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணம் என்னவென்றால், அவன் செய்யும் நற்செயல்களே ஆகும். 

ஒருவன் எச்செயலை தொடங்குவதாக இருந்தாலும், நல்வழியையே தேர்ந்தெடுக்க வேண்டும். தீய வழியை வாழ்விலிருந்து விலக்க வேண்டும்.

நல்வினை செய்தல் அது நற்பயனை விளைவிக்கும். தீவினை செய்தால், தீமையையே ஏற்படும். 

பணத்தால் இன்பமும், துன்பமும், மதிப்பும், மரியாதையும் உருவாவதில்லை. ஒருவன் செய்யும் செயல்களே இவை அனைத்தையும் தீர்மானிக்கின்றன.

பணம் தான் எல்லாம் என்று கருதாமல், உறவுகள் தான் மிக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வாழும் வாழ்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

இந்த வாழ்க்கை கவிதையிலிருந்து பணம் பற்றிய விளக்கத்தை உணர்ந்து இருப்பீர்கள். 

நன்றி!

– கவிதை குழல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *