வாழுங்கள்! – வாழ்க்கை கவிதை | Kavithai Kuzhal
வாழ்க்கை கவிதை – வாழுங்கள்! | கவிதை குழல்
பயணத்தில் தடைகள்
உருவாகத்தான் செய்யும்.
தடைகளை எதிர்கொண்டு
வாழ வேண்டுமே தவிர, மடியக் கூடாது.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வாழ்க்கை கவிதை – வாழுங்கள்! | கவிதை குழல்
பிறவிகளில் மனிதனாக பிறப்பது என்பது மகத்துவம் வாய்ந்தது ஆகும்.
ஒவ்வொரு வாழ்விலும் பல சோதனைகள் உருவாகத்தான் செய்கின்றன.
வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டு சிலர் தன் வாழ்வையே அழித்துக்கொள்கிறனர்.
உண்மையை சொல்லப்போனால், சுழலும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் என்றாவது ஒரு நாள் இவ்வுலகை விட்டு பிரியத்தான் வேண்டும்.
வாழ்வில் ஏற்படும் தடைகளை கண்டு தனது வாழ்வை முடித்துக் கொள்ள கூடாது.
தடைகளைக் எதிர்த்து போராட மனவலிமையை தன்னுள்ளே உருவாக்கிக் கொள்ள வேனண்டும்.
மனவலிமை ஒன்று தான் எவ்வித தடையையும் சமாளிக்க ஊக்கத்தை அளிக்கும்.
வாழ்க்கையை ஒரு நொடியில் முடித்து கொள்ளாதீர்கள்; தடைகளைக் எதிர்கொண்டு வெற்றி காணுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.