காலம்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
காலம்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
அறிந்து கொள்ள வேண்டியது இறந்த காலம்.
அறியாமல் இருத்தல் வேண்டியது எதிர்காலம்.
புரிந்து வாழ்!
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
காலம்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
வாழும் காலமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகும்.
மனிதனானவன் இறந்த காலத்தை பற்றி அறிந்து கொள்வதன் வாயிலாக நிகழ்காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை காண இயலும்.
இறந்த காலத்தில் ஏற்பட்ட பல வாழ்வியல் நிகழ்வுகள், ஒருவன் நிகழ்காலத்தோடும் தொடர்புடையவனாக இருக்கும்.
வாழும் வாழ்க்கையில் சில முடிவுகள் இறந்த காலத்தின் தன்மையை ஒட்டியே எடுக்கப்படுகின்றன.
நேற்று நடந்தது என்ன? என்பதை அறிந்தால் மட்டும் தான், இன்று எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் எதிர்காலமானது எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ள இயலாது.
ஒருவேளை எதிர்கால வாழ்வானது எவ்வாறு இருக்கவேண்டும் என்று அறிந்து கொண்டால், அதனால் நிகழ்கால வாழ்க்கையானது முற்றிலும் துன்பத்தையே தரும்.
உண்மையை சொன்ன போனால் நாளை என்ன நடக்கப் போகிறது என்று, இன்றே அறிந்தால் அதனால் ஏற்படும் மன துன்பங்கள் சொல்ல இயலாத ஒன்றாகும்.
நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயலே எதிர்காலத்தில் நம்மை காக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எதிர்காலமானது எவ்வாறு இருக்கும் என்று யாராலும் கூற இயலாது. நிகழ்காலம் ஒன்றே நம் கையில் இருப்பதாகும்.
நிகழ்கால வாழ்வை மகிழ்ச்சியாக வாழ தொடங்குகள்.
நன்றி!
– கவிதை குழல்