வாழ்க்கை பயணம் பேருந்தில்… | Kavithai Kuzhal
வாழ்க்கை பயணம் பேருந்தில்… | Kavithai Kuzhal
வணக்கம்!
வாழ்க்கையானது பல நிகழ்வுகளை தன்னிடத்திடே கொண்டது.
வாழ்க்கையில் நடக்கும் பல அற்புத நிகழ்வுகள், உலக மக்களுக்கு தனி மனித மேன்மைக்கான வழியையும், பிறப்பின் மகத்துவத்தையும், வாழ்வின் போக்கையும் எடுத்துரைக்கும்.
வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தை அடித்தளமாக எடுத்துக்கொண்டு, வாழ்வை மேம்படுத்த ஓரு உன்னத தத்துவமானது இப்பதிவில் உங்களுக்கு கிடைக்கும்.
வாழ்க்கை பயணம் பேருந்தில்..
பெரும்பாலான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவதற்கு பேருந்தையே அதிகமாக பயன்படுத்துவர். பேருந்து பயணமே அனைவரது வாழ்க்கைக்கும் எளிதாகவும் இருந்தது.
பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதே ஆகும்.
பேருந்து பயணத்தில் நடந்த நிகழ்வே ‘’வாழ்க்கை பயணம பேருந்தில்’’ என்ற தலைப்பு உருவாக காரணமாக இருந்தது.
அது ஒர் அழகிய கிராமம் ஆகும். அந்த கிராமானது இயற்கை எழில் மிகு சோலையாக காட்சி தரக்கூடியது. நீர் வளமானது மிகுந்து ஆற்றில் ஓடியது. அது மட்டுமில்லாமல், அங்கு மழையும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெய்ந்தது. அக்கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையானது தினந்தோறும் இன்பத்தை அளிக்கும் வகையிலே அமைந்தது.
மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பொழிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட ஊரில் நிலத்தில் வளரும் பயிர்களும், மரத்தில் காய்க்கும் கனிகளும் நல்மக்களுக்கு தேவைக்கு அதிகமாகவே இயற்கையானது அள்ளித்தந்தது.
ஏனென்றால், அம்மக்கள் தங்கள் வயல்களை தன் குடும்பத்தின் ஒரு நபராகவே கருதி பேணி காத்தனர், தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தாமே தீங்கு செய்ய நினைப்போமா என்ன? இல்லை தானே!.
அதுபோலத் தான் அம்மக்களும் தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரத்தையே உணவாக தந்தனர். அதனால் தான், மக்களுக்கு தேவையானவற்றை நிலமும் அள்ளி தந்தது.
அதாவாது, அவர்கள் நலமாக வாழ நல்ல சத்தான உணவு பொருள்களை வழங்கியது. இதனால் தான் மக்கள் தன் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நலமாக வாழ்ந்தனர்.
இக்காரணத்தால் தான், அந்த ஊரில் உள்ள மக்கள் மகிழச்சியாகவும், நலமாகவும் இன்புற்று வாழ்ந்தனர்.
ஒரு ஊரை பற்றி இப்படியெல்லாம் வர்ணியிக்க வேண்டுமென்றால்,அந்த ஊரில் இருந்தவரால் தான் முடியும்.
ஆம். நான் அந்த ஊரில் சில காலம் வசித்து வந்தேன். அப்போது தான் புரிந்தது ஒரு மனிதன் ஆனவன் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டுமெனில், அவன் தன்னை எவ்வாறு எல்லாம் வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே.
இவையெல்லாம் எவ்வாறு தோன்றியது என்றால், நான் அந்த ஊரை விட்டு விலகி, பேருந்தில் பயணம் செய்த போதே ஆகும்
அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது என்ன என்பதை இனி காணலாம்.
1.ஒருவன் தன்னலம் கருதாமல், பொது நலம் கருதி வாழ வேண்டும்.
2.இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையே, அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
3.உடலை பாதுகாக்க வேண்டுமெனில், முதலில் நிலத்தை பாதுகாக்க வேண்டும்.
4.வாழ்க்கையை அனைவரோடும் இனைந்து வாழ்; அதுவே , அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
5.மழை வளம் பெருக, மண்ணில் மரம் வளம் பெருக வேண்டும்.
இதன் மூலம் வாழ்க்கை பயணத்தின் உண்மையாக மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து இருப்பீர்கள்.
நன்றி!
-கவிதை குழல்