முடிவுகள் – முடிவுகளை சிந்தித்து எடு! | Kavithai Kuzhal
முடிவுகளை சிந்தித்து எடு! | கவிதை குழல்
அவரவர் எடுக்கும் முடிவுகளே,
அவர் வாழ்வையும் அழிவையும்
தீர்மானிக்கின்றன.
– கவிதை குழல்
முடிவுகள் – கவிதை விளக்கம்:
முடிவு என்பது சிந்தித்து எடுக்க கூடியவையாகும். அதோடு மட்டுமல்லாமல் முடிவுகளை எடுக்கும் முன்பு பல கோணத்தில் சிந்தித்தல் வேண்டும்.
முடிவு என்பது வாழ்வின் போக்கையே மாற்ற கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட முடிவை உடனடியாக எடுத்தல் கூடாது.
முடிவை பொறுமையாக சிந்தித்து, மனதில் தெளிவுக் கொண்டு எடுத்தல் வேண்டும்.
அப்போதுதான், முடிவால் வாழ்வை மேம்படுத்த முடியும். இல்லையென்றால் தவறாக எடுக்கப்படும் முடிவானது அழிவின் பாதைக்கு கொண்டு செல்லும்.
முடிவென்பது அனைத்து செயல்களுக்கும் முக்கியமானதாகும்.
ஒரு செயலை செய்யும் தருவாயில் எடுக்கப்படும் முடிவுகள் நல்வழியில் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அது நன்மையை விளைவிக்கும்.
எச்செயலை தொடங்குவதாக இருந்தாலும் அதில் அறம் வழியில் இருக்க கூடியதையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அது அனைவருக்கும் பயனளிக்கும்.
முடிவுகளை எடுக்கும் முன்பு சிந்தித்து எடுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.