வாழ்க்கை கவிதை | Kavithai Kuzhal

வாழ்க்கை என்ற பிரிவின் வாயிலாக நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள், பிரச்சனைகள்,  அந்த பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது?  போன்ற கேள்விகளுக்கான விடையை கவிதைகளின் வாயிலாக காணவிருக்கிறோம்.

வாழ்க்கை பற்றிய முன்னுரையை  முதலில் பார்க்கலாம்.

மனித வாழ்க்கை என்பது பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்வுகளை உள்ளடக்கியதாகும்.

ஒரு மனிதனானவன் பிறந்து வளர்ந்து இன்ப துன்பங்களை அடைந்து,  திருமணம் செய்து,  பிள்ளைகளை பெற்று,  அவர்களை வளர்த்து,  அவர்களை நல்ல நிலைமையில் உருவாக்கிவிட்டு,முதிர்ந்து தன்னுடைய  உயிரை இழந்து விடுகிறார்கள்.

 இது போன்ற சூழல் தான் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வாழ்விலும் காணப்படுகின்றது.

 இதனால் வாழ்வின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளாமல் போகின்றோம். மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் முக்கியம் தான் இருந்தாலும் நாம் இன்னும் அடைய வேண்டியது அதிகமாக உள்ளது இந்த மானுடப் பிறவியில்.

அதைத்தான் இந்த வாழ்க்கை என்ற பகுதியின் வாயிலாக நாம் பார்க்கவிருக்கிறோம். அதாவது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முயற்சியை மேற்கொள்ள போகிறோம்.

ஒருவன் குழந்தையாகப் பிறந்து பல கேள்விகளை கேட்டு தன்னுடைய அறிவை வளர்த்து மக்களுக்கு நன்மை செய்து கொள்வதற்காக தன்னுடைய  வாழ்வை அர்ப்பணிக்கறான்.

மற்றொருவன் தன்னுடைய சுயநலத்திகாக வாழவும் செய்கிறான். உண்மையை சொல்லப்போனால் உலகிலுள்ள அனைத்து மக்களுமே நல்லவர்கள்தான்.  ஆனால் அவர்களுக்கு ஏற்படும் சூழ்நிலையானது அவர்களை முழுமையாக மாற்றி விடுகின்றது.

அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முதல் காரணமே அவன் செய்யும் செயலாகும். நல்வினை செய்வதன் மூலம் நற்பயனை அடைகிறான். தீய செயல்களில் ஈடுபட்டால் அதனால் பெரிதும் துன்பத்திற்கு உள்ளாகிறான்.

அவரவர் மேற்கொள்ளும் செயல்களை பொறுத்தும் அவர்களது வாழ்வதே நிர்ணயிக்கப்படுகிறது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

வாழ்க்கையானது பல பிரிவுகளை உள்ளடக்கியதாகும். வாழ்க்கையில் பல சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும். நடந்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வுகள் கிடைத்து விடாது.

 அதற்கான ஆதாயத்தை நாம் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நடக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை நம்மால் காண முடியும.

 உண்மையில் பிரச்சனைகள் இல்லாத மனிதன் என்பவன் யாரும் இல்லை. பிரச்சனைகள் சந்திக்காதவன் வாழ்வில் எப்பயனையும் அடையப் போவததுமில்லை.

சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுமே ஒவ்வொரு அனுபவமாகும். அந்த அனுபவமே ஒரு மனிதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஏணி ஆகும்.

வாழ்க்கையை பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ‘வாழ்க்கையானது வாழ்வதற்காகவே’ என்பதை நினைவில் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆரம்பியுங்கள்.

இனி வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக வாழ்க்கை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை காணலாம்.

1. தேர்ந்தெடு

அமிர்தம் எது?  நஞ்சு எது? என அறிந்து 

உன் வாழ்வில் சேர்த்துக்கொள்.

-கவிதை குழல்

2. தன் நிலையை அறிக

தன் நிலையை அறிந்து கொள்ளாமல், 

பிறரை குறை கூறிக் கொண்டு இருப்பதால் 

உன் வாழ்வில் எப்பயனும் நிகழப்போவதில்லை.

தன் நிலையை அறிந்து வெற்றி கொள்

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *