வாழ்வின் தேடல்!
வாழ்வின் தேடல்!
மனதுள் ஆயிரம் எண்ணம்
எது சரி என புரியாத வயது
இது செய்யாவிடில்,
முதுமையில் வருத்தம்…
நான் என் செய்வேன்?
புரியவை இயற்கையே!
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
ஒருவன் தனது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை அறிய முற்படும் போது தனது பிறப்பிற்கான அர்த்தம் என்ன? எனபதையும் தேட ஆரம்பிக்கின்றான்.
அவ்வாறு தனது வாழ்விற்கான அர்த்தத்தை தேடும் போது, மனதுள் பல ஆயிரம் எண்ணங்கள் உதயமாகின்றன.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்விற்கான நோக்கத்தை அடைய சில செயல்களை முயற்சித்தாலும், அது சரியான வழிதான என்பதை அறிய முடிவதில்லை.
பல சூழ்நிலைகள் அவனுக்கு பல்வேறு விதமான அறிவுரையை கற்று தந்தாலும் எது சரி என புரிந்து கொள்வதற்கான பக்குவமோ அவனிடத்தில் இல்லை.
ஆனாலு, சில செயல்களை செய்யாவிடினும் முதுமையில் வருத்தம் தான் எனவும் அறிய முடிகிறது.
அவன் வாழும் இயற்கையே அவனுக்கு அனைத்தையும் விளங்க வைக்கும் என இயற்கை சூழலை அறிய தொடங்குகிறான்.
நமது கேள்விக்கான பதில்கள் அனைத்தையும் இயற்கையே வழங்குகின்றன.
வாழ்வின் தேடல் இயற்கையில்…
நன்றி!
– கவிதை குழல்.