வாழ்வை வளமாக்கும்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வாழ்வை வளமாக்கும்! | Kavithai Kuzhal
அறிவு, உழைப்பு
ஆகிய இரண்டும்
ஒரு மனிதனின் வாழ்வை
வளமாக்க செய்ய உதவும்.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
வாழ்வை வளமாக்கும்! | Kavithai Kuzhal
வணக்கம்!
ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த செய்வதில் அறிவு மற்றும் உழைப்பு ஆகிய இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையை வளமாக்க செய்ய வேண்டுமெனில் அதற்கு பணம் சம்பாதிப்பது என்பது இன்றியமையாத்தாகும். இதற்கு மிகவும் துணைபுரிவது அறிவு மற்றும் உழைப்பு ஆகும்.
அறிவு ஆனது ஒரு செயலை தொடங்குவதுதற்கு உதவும்.
அறிவின் துனைக்கொண்டு மேற்கொண்ட செயலை முடிக்கவும் இயலும். அறிவால் தொழிலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முடியும்.
ஒரு மனிதன் ஒரு செயலை தொடங்கும் போது உழைத்தல் என்பது இன்றியமையாததாகும். உழைத்தால் மட்டுமே செயலில் முழுமையாக நாம் எண்ணியதை அடையவும் முடியும்.
அனைவருமே ஒரு செயலை மேற்கொள்ளும் போது, அறிவு மற்றும் உழைப்பை உபயோகித்து தனது செயலுக்கான பயனை அடைய முயல வேண்டும்.
செயலில் செயல்படும் விதத்தை பொறுத்து, வெற்றியானது கிட்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அறிவோடு உழைக்க ஆரம்பியுங்கள்!
நன்றி!
– கவிதை குழல்.