விடையை அறிய முயற்சி செய்!
விடை தெரியா கேள்விகள்
எழும்பும் வேளையில்
விடையைத் தேடி
பயணத்தை தொடங்குவது
அவசியம்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
கேள்விகள் உருவானால் தான் அறிவு ஆனது மேம்படும்.
சில இக்கட்டான சூழ்நிலைகளில் சில கேள்விகளுக்கு பதிலானது அவ்வளவு எளிதாக புலப்படுவதில்லை.
ஆதால், உருவாகும் கேள்வி அனைத்திற்கும் பதிலானது தன்னிடத்தில் தான் இருக்கும் என்று கூறவும் இயலாது.
பரந்து விரிந்து இருக்கும் உலகத்தில் யாரோ ஒரு நபருக்கு, தனக்கு ஏற்பட்ட கேள்வி போன்றே அவருக்கும் தோண்றியிருக்கும.
தனக்கு தோண்றிய கேள்விக்கு பதிலானது தன் அருகாமையிலே இருக்கலாம்.
ஆனால், மனமோ அதனை புரிந்து கொள்ள முற்படுவதில்லை.
ஒரு சிறு பயணத்தை தொடங்கினாலே தமக்கு தேவையான அத்தனை பதில்களும் சூழ்நிலையானது உணர்த்தி விடும்.
மன அமைதியோடு சிந்தித்து பாருங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.