விமர்சனங்களை கண்டால் வெற்றியில்லை!
விமர்சனங்களை கண்டால் வெற்றியில்லை! – கவிதை குழல்.
விமர்சனங்களை கண்டு என்றும் மனம் தளராதீர்கள்…
விமர்சனங்கள் கூறும் எவரும் உங்கள் பாதையில் பயணிக்க போவதில்லை…
தான் மட்டுமே பயணிக்கிறேன் என்பதை நினைவில் கொண்டு உங்கள் பாதையில் பயணியுங்கள்…
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
ஒருவன் எச்செயலை தொடங்கினாலும், தன்னை சுற்றியுள்ள மனிதர்களால், அவன் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவான்.
இதனால், சில நபர்கள், தான் தொடங்கிய செயலை இடையிலே விட்டு விடுகின்றனர்.
இவ்வாறு செய்தால், எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற முடியுமா?.
இதுபோன்ற விமர்சனங்கள் எழும் தருவாயில், அதனை கண்டு கொள்ளாமல், இடைவிடாமல் தனது செயலை செய்ய ஆரம்பித்தாலே அதற்கான பலன் தக்க நேரத்தில் வந்தடையும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்!
நன்றி…
– கவிதை குழல்.