செய்யும் செயலில் தெளிவை பெறு!
செய்யும் செயலில்
என்ன செய்ய வேண்டும்?
என்பதை விட
எதற்காக செய்ய வேண்டும்?
என்ற தெளிவை
பெற்றிருத்தல் வேண்டும்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
ஒருவன் செயலை மேற்கொள்ளும் போது, எதற்காக செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
செயலால் வரப்போகின்ற நன்மை மற்றும் தீமை ஆகியவற்றை ஆராய்ந்து, செயல் ஆனது நன்மை பயக்கும் வகையில் இருந்தால் மட்டும் தான், செயலை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு செயலுக்கு பிறகும் ஒரு அனுபவம் உண்டாகும்.
அனுபவம் பெற்று, செயலுக்கான தெளிவை பெற வேண்டும்.
செய்கின்ற செயலில் தெளிவு இருந்தால் தான், செயலானது வெற்றி அடையும்.
நன்றி!
“Get Clarity On To Making Work”
– கவிதை குழல்.