தவறை நிறுத்தி விடு!
தவறு என தெரிந்தால், நிறுத்தி விடு.
இல்லையெனில், காலம் அதனை செய்யும்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
ஒரு செயலை செய்யும் போது, அதனை நல்வழியில் தான் தொடங்கி இருப்போம்.
ஆனால், எந்த ஒரு செயலும் தொடங்கியவுடன் வளர்ச்சியை எட்டுவதில்லை.
வளர்ச்சி அடைய வேண்டுமெனில், செயலில் தனது உழைப்பை செலுத்த வேண்டும்.
அதைவிடுத்து, வளர்ச்சிக்காக தவறான வழியில் சென்றால், செயலானது கெட்டொழியும்.
செயலை தொடங்கிய போது இருந்த நற்பெயரும் கெட்டு, தவறான செயலால் இதுவரை கிடைத்த புகழும் கெட்டொழியும்.
தவறு என மனதில் பட்டால், அதனை செயலில் நிறுத்தி விட வேனண்டும்.
– கவிதை குழல்.