விளக்கு கவிதை! | கவிதை குழல்
பட்டி முதல் விளக்கு எரிய
பட்டினம் எல்லாம் ஒளி வீச
பாரத தாயின் மனம் மகிழ்ந்து
நாடு செழிக்கட்டும்!
– கவிதை குழல்.
விளக்கு கவிதை விளக்கம்:
வணக்கம்!
இக்கவிதையானது, ஒளியை தரக்கூடிய விளக்கை நாடோடு உவமைப்படுத்தி, ஒவ்வொரு மனிதனும் தனது நாட்டை வளம்படுத்த ஒளியை போல் பிரகாசமாக, உற்சாகமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது.
நாடு என்பது ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக வாழ வழி செய்கிறது. அது எவ்வாறென்றால், ஒருவன் பிறந்ததிலிருந்து அவனது வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது.
ஒரு நாடு வளமாக இருந்தால் மட்டும் தான், நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் வளமாக இருக்க முடியும்.
ஒவ்வொரு மனிதனும் வளமாக இருக்க வேண்டுமெனில், அவனது உழைப்பு நாட்டிற்கு இருத்தல் வேண்டியது இன்றியமையாததாகும்.
நாடு செழிக்க எரியும் விளக்கைப் போல் அனையாமல் இருத்தல் அவசியமாகும்.
நன்றி!
– கவிதை குழல்.