Tamil Motivational Quotes – இடையூறுகளை படிகளாக்கு! | Kavithai Kuzhal

Tamil Motivational Quotes –  Kavithai Kuzhal

இடையூறுகளை படிகளாக்கு!

இடையூறுகள் இன்றி எச்செயலும்

வெற்றி கண்டதாய் சரித்திரமில்லை.

எனவே, இடையூறுகளை படிகளாக்கி

முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

– கவிதை குழல்

Tamil motivational quotes 

கவிதை விளக்கம்:

வணக்கம்!

கவிதையானது செய்யும் செயலில் இடையூறுகள் தோன்றுமாயின், இடையூறுகளை படிகளாக்கி வெற்றியை அடைய வேண்டும் என்ற உன்னத கருத்தை பற்றி விளக்குகிறது.

இடையூறுகள் ஆனது எந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி அதில் உருவாக தான் செய்யும்.

இடையூறுகளைக் கண்டு செய்யும் செயலை ஒருபோதும் விட்டு விலகுதல் கூடாது.

செய்யும் செயலானது ஒருவன் தன் திறன் அடிப்படையில் மேற்கொண்டு இருப்பின், செயலை தொடர்ந்து செய்ய அவனுக்கு மன வலிமையைக் ஒன்றே போதும்.

இவ்வுலகில் வெற்றி அடைந்தவர்களாக கருதப்படுபவர்கள் அனைவரும், வெற்றி அடைந்ததற்கு காரணம் மன வலிமை கொண்டு செய்யும் செயலை சிறப்பாக செய்தே ஆகும்.

ஒருவேளை அவர்கள் செய்யும் செயலில் இடையூறுகளைக் கண்டு அவர்கள் விலகி இருந்தால், உலகில் உயர் நிலைமையை அடைந்திருக்க இயலாது.

ஒருவனுக்கு இருக்கும் மனவலிமையே ஒரு செயலை மேலும் மேலும் செய்ய துணை புரியும்.

மன வலிமையுடன் செயலை மேற்கொண்டால் மட்டும் தான் அதில் வெற்றி அடைய முடியும்.

இடையூறைக் கண்டு மனம் வருந்தி செயலை விட்டு விலகினால் உவகில் நிலைபேறு என்பது என்றும் உருவாகாது.

ஒரு செயலை மேற்கொள்ளும் போது இடையூறு ஏற்பட்டு அது பல அனுபவங்களை கற்று தரும்.

இடையூறுகள் ஏற்படும் போது கற்று கொள்ளும் பாடம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனை காக்கவும் செய்யும்.

ஒரு செயலின் மூலம் கற்றுக் கொள்ளப்படும் பாடமே, மேற்கொண்ட செயலை விரிவடையும் செய்யும்.

ஒரு செயல் உலகில் நடைபெற வேண்டுமென்றால், அச்செயலுக்கான தகுந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

இடையூறுகள் இன்றி எந்த ஒரு செயலும் முழுமையாக முடிந்தது இருக்கின்றதா? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.  அதன் உண்மைத்தன்மை புலப்படும்.

உண்மையை சொல்லப்போனால் ஒருவன் மேற்கொள்ளப்படும் செயலானது, மற்றொருவரின் இன்னலை போக்குவதற்காகவே ஆகும்.

பல நபர்களின் துன்பங்களை தீர்க்க மேற்கொண்ட செயலானது, இடையூறு கண்டு நிறுத்தினால் அதன் விளைவானது என்னவாகும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

செயலை மேற்கொண்ட பிறகு, அதனை முடித்தே தீர வேண்டும். பல நபர்கள் நன்மை அடைவார்கள் என சிந்தித்தால் அனைத்து இடையூறுகளையும் எளிதாக கடந்து செல்லலாம்.

ஒருவன் செயலை மேற்கொள்ளவது எதற்காக என்றால் பொருள் ஈட்டுவதற்காகவும் ஆகும்.

ஏனென்றால் பணத்தை சம்பாதித்தால் மட்டுமே அவனுடைய குடும்ப சூழலையும் சமாளிக்க இயலும்.

உலகில் தேவையை தீர்க்கும் கருவியாக இருப்பது என்னவென்றால், பணத்தை சம்பாதிப்பதே ஆகும்.

ஒரு செலை ஆரம்பித்துவிட்டு இடையூற்றை கண்டு விட்டுவிட்டால், என்னவாகும் என்று இக்காலத்திலும் சிந்தித்துப் பாருங்கள்.

தேவை என்பது அனைவருக்கும் இருப்பதே ஆகும். தேவையை தீர்க்க சென்றால் இடையூறுகள் உருவாவதும் இயல்பே ஆகும்.

இடையூறுகள் இன்றி எந்த ஒரு செயலும் நிறைவு பெறாது‌.

செயலில் ஏற்படும் இடையூறுகளை படிகளாக்கி, வெற்றி கனியை பறிக்க முயற்சி என்ற ஏணியை பயன்படுத்துங்கள்.

நன்றி!

– கவிதை குழல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *