இறை வாழ்த்து பாடல் - கவிதை குழல்
வணக்கம்!
இறைவன் உலக உயிர்களுக்கெல்லாம்
முதன்மையானவன். இறைவனின்
கருணையால் தான் உலக உயிர்கள்
மகிழ்ச்சியாக வாழ்கிறது. இறைவனின்
திருவடியை வணங்கினால் மட்டும் தான்
நாம் நம்முடைய வாழ்க்கையை
மகிழ்ச்சியாக வாழ முடியும்.
இறைவன் தொடக்கமும் முடிவும்
இல்லாதவர் ஆவார். இறைவனை
வணங்கினால் மட்டுமே பிறப்பின்
இலக்கை அடைய முடியும்.
நம் முன்னோர்கள் இறைவனை
வணங்கினால் மட்டுமே பிறப்பின்
இலக்கை புரிந்து கொள்ள
முடியும் என்று கூறுவார்கள்.
உலகில் இறைவனின் அடிகளை
சேர்ந்தவர்களே மகிழ்ச்சியாக
வாழ்கிறார்கள் என்பதை
நாம் கண்கூடாக கண்டதே.
இறைவன் ஒருவனே உலக உயிர்கள்
நலமாக வாழ ஆசியை வழங்குபவன்.
அந்த நல்லாசியைப் பெற்றால் மட்டும்
தான் உயிர்கள் மகிழ்ச்சியாக வாழும்.
இறைவன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள்
அனைத்தும் மக்கள் அறவழியில்
செல்வதற்காகவே ஆகும். இறைவன்
கூறிய உபதேசங்களை பின்பற்றி நடந்தால்
மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக
வாழ முடியும். இறைவன் எங்கும் எதிலும்
நிறைந்து இருப்பவர் ஆவார். இறைவனை
கண்களால் காண வேண்டுமெனில்,
தூய மனதுடன் தனது வாழ்வை
இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
பழங்கால புராணங்களில் நம்
முன்னோர்கள்
இறைவனைக் கண்டனர் என குறிப்புகள்
எழுதி வைத்துள்ளனர். இறைவன் உருவத்தை
காண வேண்டுமெனில், முதலில் தான்
என்ற நிலையை விடுத்து இறைவன் என்ற
நிலையை உட்கொள்ள வேண்டும்.
இறைவனின் ஒரு அங்கமே நான்
என்பதையும் உணர்ந்து
கொள்ள வேண்டும். தன்னை முழுவதுமாக
இறைவனிடம் அர்ப்பணித்தால் தான்
பிறவி மோட்சத்தை அடைய முடியும் என்று
முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இறையருள் நிரம்பிய வாழ்வு தான்
மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தையும்,
இன்பத்தையும் வழங்கும். தமக்கு நடக்கும்
நன்மைகள் அனைத்தும் இறைவனின்
அருளால் கிட்டியது என கொள்ள வேண்டும்.
தீமைகள் நடந்தால் இறைவன் எனக்கு
அளிக்கும் சோதனை என கொண்டு
அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இறைவனின் சோதனையால் மட்டுமேதான்
மனிதனானவன் வாழ்வின் ரகசியத்தை
முழுமையாக அறிந்து கொள்கிறான்.
அனைவரும் தமக்கு ஏற்படும்
இன்னல்களைக் கண்டு கலங்காமல்,
இறைவனின் பாதத்தில் வைத்து,
தமக்கான நல்வழியை தேடிக்கொள்ள
வேண்டும். இறைவனைப் பற்றி வர்ணிக்க
முடியாது என்றாலும் இறைவனின்
மகிமையை நம்மால் உணர முடியும் .
கவிதை குழலின் இறை வாழ்த்துப்
பாடலை இனிக் காணலாம்.
இறை வாழ்த்து பாடல்:
ஞாயிறு ஒளியும்,மதி ஒளியும்
மண்ணில் விழ, உயிர்கள் தளிர்க்க
மாரி பொழிந்து, வளம் பெருக
வாயு நிரம்பி, உயிர்கள் காக்க
தீ உருவாகி, தீயவற்றை அழிக்க
பஞ்சபூதங்களை படைத்து
ஒரே உருவமாய் இருக்கும் இறைவனே!
அடியேனின் வணங்குதலை ஏற்பாயாக!
எழுத்துக்களுக்கு எல்லாம் முதன்மையான
அகரத்தை உருவாக்கிய இறைவனை!
தமிழ் புகழ் ஓங்க அருள் புரிவாயாக!
ஆதியும் அந்தமும் இறைவனே என்று
எப்போது உணர்கிறோமோ, அப்போதே
பிறவிப் பயனை
அடைய செல்கிறோம்.
இறைவனின் அருளால் மானுட
பிறவியை அடைந்தேன் எனக்கருதி
செயற்கரிய செயல்களை செய்ய வேண்டும்.
இறைவனின் பதியை சரணடையாவிடில்,
பிறவிக் கடலை கடக்க இயலாது.
இறைவன் போதித்த அறிவுரைகளை
பின்பற்றுமாயின், இறைவனின்
திருவடியை சேரலாம்.
இறைவனைத் தொழுது பயணித்தவர்கள்,
வாழ்வில் எப்பயனை அடைந்தார்களோ?.
- கவிதை குழல்

0 Comments: